Breaking News

தீவிரமடையும் கொரோனா? சமூக மட்டத்தில் மற்றுமொருவர்!! 450 பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தல்

பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்ட ஆசிரியர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் இதுவரையில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த நாட்களில் பாடசாலைகளில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,இச்சம்பவம் தொடர்பாக  சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில்.

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த தொற்றாளர், நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்குள்ளான லங்காபுர பிரதேச செயல ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

லங்காபுர பிரதேச செயலக அதிகாரியின் மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமையை சுகாதார பிரிவு உறுதி செய்துள்ளது.

குறித்த நபருக்கு அருகில் நெருங்கி செயற்பட்டவர்களிடம் பீ சீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்டவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கவில்லை. குறித்த நபர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரினால் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்ட நிலையில், மற்றுமொரு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *