Breaking News

பெண் சாரதியால் நேர்ந்த விபரீதம்! – மூவர் வைத்தியசாலையில்

கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் வேனொன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூவர் கடும்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு ஐஸ் கிரீம் வகைகளை ஏற்றிச்சென்ற வேனே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்த மூவரில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தை பெண் சாரதி ஒருவரே செலுத்தியுள்ளதாகவும், அவருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *