Breaking News

15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ தோட்ட பகுதி ஒன்றில் 15 வயது மகள் கர்ப்பம் தரித்த சம்பவம் தொடர்பில் தந்தையை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி வயிற்றுவலி காரணமாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டிக்கோயா, கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பரிசோதனைக்கு ஈடுபடுத்தபட்ட போதே குறித்த சிறுமி கர்ப்பம் தரித்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதற்கு அமைய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

One comment

  1. வேலியே பயிரை மேய்கிறதே!
    காலக்கொடுமை
    இந்த நாய்க்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *