Breaking News

விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் பலி

மீகொடை – வட்டரக்க ரயில் நிலையத்துக்கு அருகே லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு மாத கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் பாட்டி மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோரே உயிழந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், குழந்தையின் தாய் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

பனகொடவில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் 40 வயதான லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *