Breaking News

டெல்டா பரவலை தடுக்க புதிய முகக் கவசம் – மாணவன் கண்டுபிடிப்பு

டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இருவேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை கோரியுள்ளார்.

இன்று(2) ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டு குறித்த இரு கண்டுபிடிப்பின் நோக்கம் குறித்து தனது கருத்துக்களை இவ்வாறு குறிப்பிட்டார்.

அதாவது எனது பெயர் அப்துல் அமீர் முஹம்மது அதீப். தந்தையின் பெயர் முஹம்மது ஹனீபா அப்துல் அமீர். தாயின் பெயர் -பதுர்த்தீன் முர்சிதா எனக்கு 4 சகோதரர்களும் சகோதரியும் இருக்கின்றனர்.

நான் அல் ஹிலால் பாடசாலையின் பழைய மாணவன்.அத்துடன் தற்போது கல்முனை சாஹிரா பாடசாலையிலும் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறேன். நான் கோவிட்  வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக மருந்து ஒன்றினை கண்டு பிடித்துள்ளேன். அத்துடன் டெல்டா பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகக்கவசம் ஒன்றினையும் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *