Breaking News

இன்றைய ராசிபலன்கள் 31-07-2020

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் நாம் அந்த நாளில் செயல்களை திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும்.

கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்படுகின்ற நிலையில் இன்றைய நாளில் எந்த ராசியினருக்கு எவ்வாறான யோகங்கள் கிட்டவுள்ளன என்பதை பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்கள் 31-07-2020

Rasi

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Rasi

சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகள் மீது கோபப்பட்டு கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

Rasi

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.

Rasi

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

Rasi

புதிய திட்டங்கள் நிறை வேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

Rasi

பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

Rasi

துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் விஐபி.க்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

Rasi

கணவன் மனைவிக் குள் அன்பும், ஆதரவும் அதிகரிக் கும். தோற்றப் பொலிவுக் கூடும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள் . உத்தியோகத்தில் புது அதிகாரிகள் உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

Rasi

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப் பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

Rasi

குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி யுடன் மோதல்கள் வேண்டாம். சிறப்பான நாள்.

Rasi

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதுவேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையை புரிந்து கொள்வீர்கள், உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

Rasi

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் உயரும் நாள்.

About kalaiselvi

Check Also

இன்றைய ராசிபலன்கள் 07-08-2020

ஸ்ரீ சார்வரி ஆண்டு – ஆடி 23 – வெள்ளிக்கிழமை (07.08.2020) நட்சத்திரம் : பூரட்டாதி பகல் 2.28 வரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *