Breaking News

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால் புற்றுநோயும் வருமாம்!

ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர் லசந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் புற்றுநோய் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தக்கூடியவை. ஒரு ஸ்மார்ட்போன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் நீண்ட நாள் நோய்களுக்கு வழிவகுக்கும்.

இந்த நோய்கள் என்னவெனில் குறிப்பாக மூளை தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய், ஆண்மைக் குறைவு ஏற்படுத்தல், குழந்தைகளில் கவனம் குறைதல், சமூகப்பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம்.

அதனால் தான் நாம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டை மட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலையில் சிறுவர்கள் உட்பட பலரும் கைத்தொலைபேசிக்கு அடிமையாகி இருக்கின்றார்கள் இதனால் மன உளைச்சல், கோபம், கண்களில் வலி, விரல்களில் எரிவு போன்றவற்றையும் எதிர் நோக்கி வருகின்றார்கள்.
எதையும் நாம் அளவாக பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம்.

About kalaiselvi

Check Also

அசிங்கமாக இருக்கும் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள்!

உடலிலேயே பாதங்கள் தான் அதிக வறட்சி அடையும் பகுதி. ஏனெனில் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. எனவே உடலின் நாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *