Breaking News

ரோட்டில் செல்லும் எந்த பெண்ணைப் பார்த்தாலும் கண்ணு எங்கெங்கயோ அலை பாயுதா? உங்களுக்குள் நடப்பது இதுவாமே!

இது வயசுக்கோளாறா? மனசுக்கோளாறா? என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்த்தால், மனம் கண்ணா பின்னாவென்று அலைபாய்கிறது. இதெல்லாம் தப்பா? ரைட்டா? என்று நல்ல பையன் மாதிரி கேள்வி கேட்கக்கூடாது. இந்த மாதிரி உணர்வெல்லாம் இருப்பதால் தான், எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு வந்து, இந்த உலகம் நிலைபெற்றுள்ளது.

எந்த உணர்வும் இல்லாத ஜடமாக நாம் படைக்கப்பட்டிருந்தால், ஆண்-பெண் இணை சேரும் ஒரு செயலே நடந்திருக்காது.

எல்லாமே தேவை தான். அது எந்த அளவில் தேவை என்பதில் தான் சூட்சமம் அடங்கியிருக்கிறது. இனக்கவர்ச்சி என்பது இறைவன் படைப்பில் உண்டான அற்புதமான ஒரு செயல். அதனை குறை சொல்லக்கூடாது. பூவின் அழகை இரசிக்கலாம், ஆனால் பூவை பறித்துவிட வேண்டும் என்று நினைப்பது தான் முட்டாள் தனம்.

ஆண் XY குரோமோசோம், பெண் XX குரோமோசோமாக இருப்பதால், செல்களில் இருந்தே ஈர்ப்பு தொடங்குகிறது. இதனை கட்டிப்போடுகிறேன் என்று நினைத்தால், சுற்றி இருப்பவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று தான் அர்த்தம்.

ஒரு பெண்ணை பார்த்த உடனே எனக்கு எந்த உணர்வும் வரவில்லை. வாழ்க்கையில் நான் சைட் அடித்ததே கிடையாது. நானெல்லாம் உத்தமன் என்று சொல்லி, எல்லாவற்றையும் மறைத்து நல்லவன் போன்று சமுதாயத்திற்கு காட்டுக்கொள்வதினால் எந்த ஒரு பயனும் இல்லை.

எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்தேன். “ஒருவன் தனிமையில் இருக்கும் போது, என்ன மாதிரி சிந்திக்கிறானோ, என்ன செய்கிறானோ, அதுவே அவனது உண்மை முகமாகும்.

ஒரு பெண் கடந்து செல்லும் போது, உடலில் ஹார்மோன் சுரந்து சைட் அடிக்க சொல்கிறதா? சைட் அடியுங்கள் தப்பில்லை. அது அந்த பெண்ணை பாதிக்காத வரையில் இருந்தால் நல்லது. அதற்கென குருகுருவென்று பார்க்கக்கூடாது, சங்கடமாக இருக்கும் இல்லையா?

உணர்வை வெளிப்படுத்தாமல் பொத்தி பொத்தி வைத்து, ஒரு சிலர் அதிவீரியத்துடன் வெளிபடுத்தும் உணர்வு தான், பல பெண்களின் வாழ்வை சிதைக்கிறது. அடுத்தவர்களுக்கு பாதிப்பில்லாமல், உங்கள் உடல் மொழிக்கு பதில் கொடுங்கள் போதும்.

About kalaiselvi

Check Also

38 வயது பெண்ணை தாயாக்கிய 19 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

திருகோணமலையில் 38 வயதுடைய பெண்ணொருவருடன் தகாத உறவு கொண்டு அவரை கர்ப்பிணி ஆக்கியமை தொடர்பாக  இளைஞன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *