முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து, கடை வியாபாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த கடை வியாபாரி அப்துல். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று இதுபோன்று இவர்களுக்குள் தகராறு ஏற்படவே, இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் சனிக்கிழமை இரவு அப்துல் சாலையில் நின்று கொண்டு இருக்கையில், அங்கு வந்து சர்வசாதாரணமாக துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய 2 பேரையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here