Breaking News

லங்காபுர பிரதேச செயலக ஊழியருக்கு கோரோனா

பொலநறுவை லங்காபுர பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நாட்டில் நேற்று கோரோனா தொற்றுள்ள எவரும் கண்டறியப்படாத நிலையில் இன்று பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கோரோனா உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

கந்தகாடு மறுவாழ்வு மையத்தில் கோரோனா தொற்றுடன் கண்டறியப்பட்ட நோயாளியுடன் இந்த உத்தியோகத்தருக்கு நெருக்கமான தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளியுடன் நேரடித் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *