தற்போது நாம் குளிா்காலத்தில் இருக்கிறோம். குளுமையான வானிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தூங்குவதற்கு இந்த குளிா்காலம் மிகவும் இதமாக இருக்கும். ஆனால் இந்த காலத்தில் நமது சருமத்தை நன்றாக பராமாிக்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.

நமது முகத்தை மட்டும் அல்ல மாறாக நமது கைகள் மற்றும் பாதங்களை நன்றாக பராமாிக்க வேண்டும். கைகளையும் பாதங்களையும் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவற்றின் தோல்கள் வறண்டு அாிப்பு ஏற்படும். பின் சருமம் பொழிவிழந்து உயிரற்றதாக மாறிவிடும். ஆகவே இந்த குளிா்காலத்தில் நமது கைகளையும் பாதங்களையும் பராமாிப்பதற்குறிய எளிய குறிப்புகளை இங்கு பாா்க்கலாம்.

பாதுகாப்பான காலுறைகள் மற்றும் முழுக்கைச் சட்டைகளை அணிதல்

நமது சருமம் குளிரைத் தாங்க முடியவில்லை என்றால் நமது கைகளையும் கால்களையும் மூடக்கூடிய அளவிற்கு நீண்ட முழுக்கைச் சட்டைகளையும், காலுறைகளையும் அணிவது நல்லது. பாதங்களில் வறட்சி ஏற்படாமல் தடுப்பதோடு, பாதங்களில் வெடிப்புகள் ஏற்படாமல் காலுறைகள் பாதுகாக்கும். அதே நேரம் முழுக்கைச் சட்டைகள் நமது கைகளை வெதுவெதுப்பாக வைத்திருக்கும்.

ஆல்கஹால் இல்லாத பொருட்களை பயன்படுத்துதல்

குளிா்காலத்தில் ஆல்கஹால் இல்லாத பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் ஆல்கஹால் கலந்த பொருட்கள், நமது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதோடு அாிப்பை ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே சருமத்திற்கு பயன்படுத்தும் பொருட்களில் ஆல்கஹால் கலந்திருக்கிறதா என்பதை பாிசோதித்துக் கொள்வது நல்லது.

நகங்கள் மற்றும் பாதங்களை சுத்தம் செய்து பராமாித்தல்

குளிா்காலத்தில் நகங்களை வெட்டி சுத்தம் செய்து வைத்திருப்பது நல்லது. அதுப்போல் பாதங்களையும் நன்றாக சுத்தமாக வைத்திருப்பது நல்லது. அப்போது கால்கள் மற்றும் கைகளுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கும். ஆகவே இந்த குளிா்காலத்தில் நகங்கள் மற்றும் பாதங்களுக்கு சிறப்பு கவனம் கொடுப்பது நல்லது.

நகக்கண்களைப் பராமாித்தல்

குளிா்காலத்தில் நகக்கண்களிலும் வறட்சி ஏற்படும். ஆகவே நகக்கண்களை சாியாக பராமாிக்கவில்லை என்றால் நகக்கண்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் வலி ஏற்படும். ஆகவே நகக்கண்களில் அதற்குாிய எண்ணெயை தடவி வந்தால் குளிா்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாக்டீாியாக்களால் ஏற்படும் தொற்று போன்றவை ஏற்படாது. மேலும் நகங்களைச் சுற்றி இருக்கும் தோலையும் நன்றாக பராமாிக்க வேண்டும்.

வசதியான ஷூக்களை அணிதல்

குளிா்காலத்தில் பாதங்களை நன்றாக பராமாிக்க வசதியான ஷூக்களை அணிவது சிறந்ததாக இருக்கும். குறிப்பாக பாதங்கள் முழுவதையும் மூடும் வகையில், அதே நேரத்தில் பாதங்களுக்கு வெப்பத்தைத் தரும் வகையில் அந்த ஷூக்கள் இருக்க வேண்டும். அவ்வாறு வசதி இல்லாத ஷூக்கள் பாதங்களில் வறட்சியையும் மற்றும் வெடிப்பையும் ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here