Breaking News

உங்களை அறியாமலேயே iPhone வாங்க தூண்டும் 13 சுவாரஸ்ய தகவல்கள்!

Android மொபைல் வைத்திருக்கும் ஒவ்வொருவரின், உச்ச கட்ட இலக்கு ஆப்பிள் போனாக மட்டுமே இருக்கும்.

ஒவ்வொன்றுக்கும் காசு கொடுக்கணும், Android போல எளிமை இல்லை என்றாலும் பிராண்ட் என்ற ஒற்றை வார்த்தையில் மயக்கி விடுகிறது Iphone. பல பேர் கூடியிருக்கும் விழாவில், ஐ-போன் ரிங்டோனுடன், நுனியில் கடித்தது போன்ற ஆப்பிள் லோகோ மின்ன, பாக்கெட்டில் இருந்து வெளியே எடுப்பதை கெத்தாக நினைக்கின்றனர்.
இந்த அளவுக்கு உச்சம் கண்ட நிறுவனம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அடுத்து பார்க்கலாம்.

1. மேலே இருக்கும் படத்தில் நீங்கள் காண்பது Steve Jobs என்பவர். Apple நிறுவனர்களில் ஒருவர். இறுதியாக எடுக்கப் புகைப்படம் தான் அது.
2. Apple நிறுவனத்தில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள்.

3. அமெரிக்காவில் திறைசேரியில் உள்ள பணத்தின் அளவை விட, இரண்டு மடங்கு பணம் Apple நிறுவனத்திடம் உள்ளது.
4. Apple கணினிகளை பயன்படுத்தும் போது புகைப்பிடித்தால், Warranty Cancel ஆகிவிடும் என்ற உண்மை பலருக்கும் தெரியாது.
5. Apple என்ற பெயர் வர காரணம், அதன் நிறுவனர் Steve Jobsக்கு பிடித்த பழம் என்பது தான்.

6. 1983 ஆம் ஆண்டு Lisa என்ற பெயருடைய கணினியை வெளியிட்டது Apple நிறுவனம். ஆனால் அது தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாது சுமார் 2,700 Lisa கணினிகள், ஒரே இடத்தில் எரிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
7. நியூட்டனின் ஆப்பிள் தான் Apple நிறுவனத்தின் முதல் லோகோவாகும்.
8. Apple தலைமையகத்தில் வேலை செய்யும் ஒருவரின் சராசரி சம்பளம் வருடத்திற்கு 1,25,000 டாலர்கள் வரை இருக்கும்.

9. Apple iPad-ல் பயன்படுத்தப்படும் Retina display, Samsung நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
10. iPod சாதனத்தை உருவாக்கிய Tony Fadell, அதனை Real Networks மற்றும் Philips கம்பெனிகளுக்கு விற்க அணுகியபோது, அவை மறுத்து விட்டன. Apple உஷாராக வாங்கிக்கொண்டது.
11. 2018 ஆம் ஆண்டில் மட்டும் 20,87,80,000 ஐபோன்கள் விற்கப்பட்டன.

12. Apple பிரபலமடைந்திருக்காத காலத்தில், Apple நிறுவன துணை நிறுவனர்களில் ஒருவர், தன்னிடமிருந்த Apple நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 800 டாலர்களிற்கு விற்றார்.அதன் இன்றைய மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
13. ஐபோனில் Siri-யிடம் நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும், Apple நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டு, பின்னர் சேமிக்கப்படுகின்றது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …