Breaking News

ஹை-பீம் லைட் பயன்படுத்த அனுமதி இல்லை! அப்படியிருந்தும் ஏன் கார்களில் பொருத்தப்படுகின்றன?

நம் நாட்டில் பல இடங்களில், சாலைகள் மிக குறுகலாகவும், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாமலும் இருக்கின்றன.

இந்த சாலைகளில் இரவில் நீங்கள் வாகனத்தில் செல்லும் போது நிறைய திருப்பங்கள் வரும். அந்த சமயத்தில் உங்கள் காரின் ஹை-பீம் லைட்டை நீங்கள் உபயோகித்தால், அது எதிரில் வரும் வாகனத்துக்கு எச்சரிக்கை சிக்னலாக இருந்து விபத்து தடுக்கப்படும்.

அதேபோல் வெளிச்சம் குறைவான, அதிக இடையூறு கொண்ட சாலைகளில் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது, உங்கள் பார்வையை தூரமாக நீட்டிக்க ஹை-பீம் லைட்டுகள் வசதியாக இருக்கும். இதனால் அடுத்து வரும் ஆபத்தை எளிதாக சமாளிக்க முடியும்.

சில நேரங்களில் ஆட்கள், விலங்குகள் சாலையை குறுக்காக இரவில் கடந்தால், குறைந்த பீம் லைட் போட்டு செல்லும் போது, சரியாக கணிக்க முடியாது.

ஆனால் ஹை-பீம் லைட் போட்டு சென்றால் சரியாக கண்டு, அதற்கு அதற்கேற்றவாறு வண்டியை செலுத்தி விபத்தை தவிர்க்க முடியும். நீங்கள் நகரத்தில் நல்ல விளக்கு வெளிச்சத்தில், உங்கள் வாகனத்தை இயக்கினால் ஹை-பீம் லைட்டின் உபயோகம் மிக குறைவாகவே இருக்கும்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …