Breaking News

இப்படியும் ஏமாற்றலாம்!! யாழில் சுப்பு குட்டியின் திருவிளையாடல்!! பணத்தினை இழந்தவர்கள் எத்தனை பேர்

யாழில் அப்பாவிகளின் புகைப்படங்களை பகிர்ந்து அனுதாப அலைகளை வீசி பண மோசடியில் ஈடுபட்டுவரும் நபர் ஒருவர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த நபர் எண்ணங்கள் திருமண வாழ்வு எனும் போலி முகநூல் கணக்கு ஒன்றினை அராம்பித்து நீண்டகாலமாக இவ்வாறான நூதன கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரி ஒருவர் தெரிவித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் தொடர்பாக நாம் ஆராய முற்பட்டோம்.

முகநூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றில் வெளியான புகைப்படங்களை இவர் தனது போலி முகநூலில் பகிர்ந்து அனுதாப அலைகளை உருவாக்குகின்றார்.

பின்னர் அதனை நம்பி தொடர்பினை மேற்கொள்பவர்களின் இடத்தினை அறிந்து அவர்கள் நேரடியாக சென்று உதவிட முடியாத இடத்தில் உள்ள தனது உறவினர்களின் தொடர்பினை வழங்குகின்றார்.

பின்னர் தனது வங்கி கணக்கிற்கு குறித்த பண உதவியை அனுப்புமாறு கூறுகின்றார். ஆனால் இவரால் பகிரப்படும் படங்களிற்கும் இவரிற்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பது எமது தேடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இவன் போன்ற ஒருசில காவாலிகளினால் உண்மையில் உதவி செய்ய முன்வருபவர்களும் உதவியினை செய்யாது திரும்பிச் செல்லும் அவலநிலை தோன்றியுள்ளது மனவேதனையை தருகின்றது.

இவ்வாறே யாழினை சேர்ந்த அரச அதிகாரி ஒருவர் இவர் பகிர்ந்த புகைப்படத்தினை நம்பி , பெண்குழந்தை ஒன்றின் குடும்பத்திற்காக தனது தங்கையின் நினைவாக 25000 ரூபா பணத்தினை இவரால் வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் தான் இவரிற்கு தெரியவந்துள்ளது. அக் குடும்பம் இந்தியாவை சேர்ந்தது என்பதுவும், ஒருசில படங்கள் இலங்கையின் தென்பகுதியை சேர்ந்தது எனவும்.

இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த உத்தியோகஸ்தர் உதவும் கரங்கள் அமைப்பினரிடம் இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார். அவர்கள் எமக்கு முகநூல் மூலம் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே இவர் இனம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் முன்னர் திருமண பொருத்துனர் என பல மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவரின் வங்கி கணக்கு இலக்கம் தொலைபேசி இலக்கம் இதோ Chavakacheri. Bank of ceylon account no 73940989 name S. Reginprakashraj. NIC 812164473v தொலைபேசி இலக்கம் 703888851.
உதவி தேவைப்படுபவர்களின் தொலைபேசி இலக்கத்தை தந்தால் அதனை தவறாக பயன்படுத்துகின்றார்களாம் என குறித்த காவாலி தெரிவித்து இவாறான மோசடியில் ஈடுபடுவதுவும் குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …