Breaking News

அதிசக்தி வாய்ந்த மின்கம்பிகள்!! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்..!

மாத்தளை – மஹவெல – மடவல உல்பத – ஹதமுனகல பிரதேசத்தில் மரம் ஒன்று பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

லாரி ஒன்றின் மீது அதிசக்தி வாய்ந்த மின்கம்பிகள் ( 33000 v) விழுந்ததில் 23, 27 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தளை, மஹாவெல பிரதேசத்திலேயே குறிப்பிட்ட சம்பவம் இன்று காலை 10:45 மணியளவில் பதிவாகியுள்ளது.
இதன்போது மின் கம்பியும் மரத்துடன் இணைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மூவர் பாரவூர்தியில் பயணித்துள்ள நிலையில் ஒரு இளைஞர் பாரவூர்த்தியில் இருந்து குதித்து தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த இளைஞர்கள் மின்சார தாக்குத்துக்கும் உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …