Breaking News

கட்டுப்பாடற்ற வேகம்..! யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இளைஞனை பந்தாடிய கார்!! வீட்டு மதில் மீது மோதி நின்றது!! 19 வயது இளைஞன் ஆபத்தான நிலையில்

யாழ் அராலி பகுதியில் காருடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த வரதராசா நிதுசன் (வயது 19) என்பவரே முகம் மற்றும் கை, கால் எலும்புகள் முறிவடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

காரானது குறித்த இளைஞனை மோதிவிட்டு வீதியை விட்டு வெளியே பாய்ந்து சுமார் 25 அடிகள் தூரத்திற்கு மதிலை இடித்து தகர்த்துள்ளது.

காரின் சாரதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கான காரணம் எனப் பொலிஸார் கூறுகின்றனர்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *