Breaking News

மன வளர்ச்சி குன்றிய சிறுவன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்

அளுத்கம – தர்கா நகரில் முஸ்லிம் சிறுவன் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸாரும் கலந்துகொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த மே 25ஆம் திகதி மாலை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்த சி.சி.ரி.வி காணொளி ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு கடுமையான காயங்கள் உடலில் ஏற்பட்ட போதிலும் அச்சம் காரணமாக அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.

பின்னர் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அலிசாஹிர் மௌலானா கூறியுள்ளார்.
தாக்குதலிற்கு உள்ளான சிறுவன் மூளை வளர்ச்சி குன்றியவர் எனவும் தெரியவருகின்றது.

தற்போதே இந்த செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
தாரிக் அஹமட் என்ற இந்த சிறுவன் சோதனை சாவடி ஒன்றில் வைத்து கடந்த மே 25ஆம் திகதியன்று தாக்கப்பட்டுள்ளார்.

இவர் ஊரடங்கு வேளை என்று அறியாத நிலையில் தமது தந்தையாரின் ஈருளியில் சோதனை சாவடி ஒன்றுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை தாக்கியதாக சிறுவனின் தந்தையார் காவல்துறையில் முறையிட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறுவனின் தந்தையார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த விடயத்தில் நீதிவேண்டும் என்று அரசியல்வாதிகள், சிவில் குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
https://www.facebook.com/110Nws/videos/315527266117522/
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஷாகிர் மௌலானா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குருநாதன் உள்ளிட்டோர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.

இதேவேளை, தர்கா நகர் தாரிக் அஹமட் பொலிஸாரால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்த தெரிவித்துள்ளார்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …