Breaking News

மனைவியின் கழுத்தை நெரித்து கொ லை செய்த கணவன்! இரண்டாவது திருமணமாகி ஒன்பதாவது நாளில் நடந்த துயரம்

மனைவியின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொ லை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கஸ்டத்திலேயே பிறந்து கஸ்டத்திலேயே வளர்ந்து சிறுவயதிலேயே தாயை இழந்து வறுமையை நிலையாக கொண்டு வாழ்ந்த ஷியாமியா (24) என்ற பெண்ணே மரணமடைந்தவராவார்.
கொழும்பு. ஊருகொடவத்தையை பிறப்பிடமாக கொண்ட நவாஸ் முகம்மது சபீக் என்பவனை  இவர் கடந்த 26-05-2020 அன்று திருமணம் முடித்திருக்கிறார்.

இவன் ஏற்கனவே ஏறாவூர், தைக்கா வீதியில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தையாகிய நிலையில் அண்மையில்தான் அம் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில் இரண்டாவதாக இப் பெண்ணை திருமணம் முடித்திருக்கிறான்.
சடலத்தின் கழுத்தில் பல இடங்களில் நகக்கீறுகள் போல் மற்றும் சங்கிலி இறுக்கியது போல் அடையாளம் காணப்பட்டதால் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கணவன் ஏறாவூர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரனைகள் தொடர்கின்றது.

இந்த சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் ஜயங்கேணி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய அப்துல் காதர் ஷியாமியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 27 வயதான உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …