Breaking News

யாழில் மயானத்திலிருந்து தப்பியோடிய இளைஞர்கள்: குண்டுகளை மீட்ட இராணுவத்தினர்!

மயானத்திற்குள்ளிருந்த இளைஞர்கள் சிலர் இராணுவத்தினரை கண்டதும் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர். அந்த இடத்தில் சோதனை நடத்திய இராணுவத்தினர் பெற்றோல் குண்டுகள், வாள்களை மீட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ள மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, பெற்றோல் குண்டுகள் இரண்டு, ஐந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் பெற்றோல், வாள் ஒன்று, சைக்கிள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டன.
குறித்த பகுதியில், இராணுவத்தினர் ரோந்து சென்ற போது மயான பகுதியில் இருந்த சில இளைஞர்கள் இராணுவத்தினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
பின்னர் இராணுவத்தினர் அவ்விடத்தில் சோதனை நடத்திய போதே குறித்த பொருட்களை மீட்டு, தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இளைஞர் ஒருவர் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …