Breaking News

வாகனத்தில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்பு!!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் வைத்து ஒரு தொகுதி கஞ்சா பொதிகளுடன் ஒருவர் நேற்று மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் வாகனத்தின் முன் பகுதியில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட 6 பொதிகளைக் கொண்ட 12 கிலோ 640 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக பொலிஸார் குறித்த வாகனத்தை ம டக்கி பிடித்து சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள்,வாகனம் ,கைது செய்யப்பட்ட நபர் மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன்,விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *