Breaking News

கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு!!

புதுக்குடியிருப்பு – மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இன்னிலையில் வீட்டில் காணப்படும் பாவனையில் உள்ள பாதுகாப்பற்ற மண் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதனை தொடர்ந்து கிணற்றுக்குள் சென்று பார்வையிட்ட போது குறித்த யுவதி உடலமாக காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உடலத்தினை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
பின்னர் சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்ட நிலையில் கொ லையா? த ற்கொ லை யா? என விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

சம்பவம் குறித்த விசாரணைகளை சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …