Breaking News

காப்புறுதி எனும் பெயரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றதா டயலொக் நிறுவனம்?

கணவனை இழந்த மனைவிக்கான தீர்வு கிடைப்பதற்காக மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் இதனை பகிருங்கள்.

காப்புறுதியாளரின் பெயர் :- அமரர் ந.சுதாகரன்
காப்புறுதி உரித்துடையவரின் பெயர் :- திருமதி. சுதாகரன்
முகவரி :- பாரதிபுரம், மூதூர்.
காப்புறுதி இலக்கம் :- CO0113AP004908
காப்புறுதி முகவர் :- டயலொக் நிறுவனம்
காப்புறுதிப் பணம் கிடைக்காமல் காத்திருக்கும் காலம் :- 2 வருடங்கள்

டயலொக் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விபத்துக் காப்புறுதியினை அறிமுகப்படுத்தி மாதாந்தம் ஒரு தொகையினை அறவிட்டு வருகின்றது.

இந்நிலையல் இதில் எத்தனை பேருக்கு இந்த காப்புறுதிப்பணம் வழங்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அந்தவகையில் டயலொக் நிறுவனத்தில் தனது கணவரால் மேற்கொள்ளப்பட்ட விபத்துக் காப்புறுதிக்கான காப்புறுதிப்பணத்தை, கணவனை இழந்த நிலையிலும் பெற்றுக்கொள்ள முடியாமல் அல்லல்படும் மனைவியின் அனுதாப நிலையே இது.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தின் பாரதிபுரம் எனும் கிராமத்தில் வசித்து வந்த புகைப்படக் கலைஞரான நாகமணி சுதாகரன் நீண்டகாலமாக டயலொக் நிறுவனத்தில் பிற்கொடுப்பனவு தொலைபேசி இலக்கத்தின் வாடிக்கையாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் டயலொக் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 2013ம் ஆண்டளவில் டயலொக் நிறுவனத்தில் விபத்துக் காப்பறுதி ஒன்றை பெற்றிருந்தார் .

இதனை தனது மனைவியிடம் நான் இறந்துபோனால் உனக்கு காப்புறுதிப்பணம் கிடைக்கும் என அடிக்கடி நகச்சுவையாக பேசுவதுண்டு.
இந்நிலையில் இவர் 12.03.2018 அன்று விபத்தின் காரணமாக அகால மரணமானார்.
கணவனின் இழப்பினைத் தொடர்ந்து டயலொக் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்புறதிப் பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக நிறுவனத்தின் நடைமுறைகளை பின்பற்றி கோரியபோதும் நிறுவனம் கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றமை வேதனையளிக்கின்றது.

இதனை பெறுவதற்காக 2 வருடங்களுக்கு மேலாக போராடிவரும் இத் தாய் கிராமப்பறத்தைச் சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்படுகின்றாரா?

அவர் காப்புறுதிப்பணத்தை பெறுவதற்காக மேற்கொண்ட முயற்சியின் எழுத்து மூலமான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தாயின் வறுமை நிலையினையும், பிள்ளைகளின் எதிர்கால நலனினையும் கருத்தில் கொண்டு தன் கணவனால் தனது குடும்பத்தின் எதிர்கால நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட காப்புறுதிப்பணத்தை டயலொக் நிறுவனம் விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தயவுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …