Breaking News

இலங்கைக்கு வந்த வெட்டுக்கிளிகள் தொடர்பாக வெளிவந்த தகவல்கள்

குருநாகல் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான பயிர்கள் மற்றும் மரங்களின் இலைகளை உட்கொள்ளும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் இதனை தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பில் கடந்த 30ம் திகதி தகவல் கிடைத்திருந்தன. இந்நிலையில், குறித்த வெட்டுக்கிளிகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் ஊடாக, இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான மரங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் இலங்கை பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். இந்தியாவை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளியும், இலங்கையை அச்சுறுத்தும் வெட்டுக்கிளியும் வேறுபட்டவை.

இந்த வெட்டுக்கிளிகள் இலங்கைக்குள் படையெடுத்தவிதம் குறித்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இலங்கைக்குள் ஏற்கனவே இருந்த வெட்டுக்கிளிகளின் இனப் பெருக்கத்தினால் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த வெட்டுக்கிளிகள் அண்மையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்திருக்க வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …