Breaking News

யாழில் மாற்று வலுவுடையவர் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்

மாற்று வலுவுடையவர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார் கிளுவம் கடடைகளால் கடுமையாக தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்படட கீரிமலை பகுதியில் கடந்த வாரம் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சென்ற பொலிஸார் மீதும் வாள்வெட்டு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கீரிமலையை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
எனினும் அவ்வாறு கைது செய்யப்படட மாற்று வலுவுடைய சந்தேக நபர் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அத்துடன் பொலிஸார் தம்மை கிழுவங்கடடையினால் கடுமையாக தாக்கியதாக பொலிஸாருக்கு எதிராக இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.