Breaking News

புகைப்பட நிலையமொன்று தீயில் எரிந்து முற்றாக நாசம்!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று(01) காலை புகைப்பட நிலையமொன்று தீயில் எரிந்து நாசமாகியது.
அக்கரைப்பற்று சாகாம வீதியில் பிரதேச செயலகத்திற்கருகில் அமைந்துள்ள புகைப்பட நிலையமே இவ்வாறு தீயில் எரிந்து முற்றாக நாசமானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியின் பயனாக தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
ஆயினும் நவீன வசதிகளுடன் புதிதாக திறக்கப்பட்ட புகைப்பட நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் நாசமாகியதுடன் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்காலம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது… குறித்த புகைப்பட நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வழமைபோன்று புகைப்பட நிலையத்தை திறந்து கடமையை மேற்கொண்டதன் பின்னர் வெளிப்படப்பிடிப்பொன்றிற்காக கடையை மூடிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

இதே நேரம் புகைப்பட நிலையம் தீயில் கருகும் வாசத்தினை அருகில் இருந்த கடை உரிமையாளரும் சிலரும் அவதானித்து கடையின் முன்கதவை திறந்த நிலையில் புகைப்பட நிலையம் எரிந்து நாசமாகுவது தெரியவந்துள்ளது.
உடன் அவர்கள் மின்சார இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் நீரை ஊற்றி புகைப்பட நிலையத்தை பாதுகாக்க முற்பட்டதுடன் உரிமையாளருக்கும் அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசாருக்கும் தகவலை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில் அக்கரைப்பற்று பொலிசாரும் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீப்பரவலுக்கு மின்னொழுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விசாரனணகள் இடம்பெற்று வருகின்றன.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …