Breaking News

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் மூலம் 650 இந்தியர்கள் அனுப்பி வைப்பு!

வடக்கு கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு இன்று INS Jalashwa என்ற கப்பல் மூலம் புறப்படுகின்றனர்.

இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு தருவிக்கப்பட்ட கப்பலில் 650 பேர் பயணிக்கும் வசதி கொண்ட நிலையில் இன்று காலை கொழும்பில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு பயணிக்கவுள்ளது.

இவ்வாறு பயணிக்கும் கப்பலில் இந்தியாவில் இருந்து பல்வேறு தேவைகளிற்காகவும் இலங்கை வந்த நிலையில் கொரோனா காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டதனால் நாடு திரும்ப முடியாத 650 பேர் பயணிக்கின்றனர்.

தூத்துக்குடி துறை முகத்திற்கு பயணிப்பதனால் அதிகமானோர் தமிழர்களே பயணிக்கும் நிலையில் வடக்கில் தங்கியிருந்த 224 இந்தியர்களும் கிழக்கு மாகாணத்தில் தங்கியிருந்த 195 பேரும் உள்ளடங்கலாகவே இன்று பயணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …