Breaking News

யாழில் 103 வயதுவரை அசராமல் வழ்ந்து வந்த பெண்மணி காலமானார்!

வடமராட்சியில் கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடுப்பிட்டி பகுதியில் 103 வயது வரை இருந்த பெண்மணி நேற்று முந்தினம் காலமானார்.

சென்ற வருடம் ஆகக்கூடுதலான வயதில் இருப்பவர் என்ற நிலையில் தெரிவுசெய்யப்பட்டு கரவெட்டி பிரதேச செயலக சமூக சேவை பகுதியினர் மூலம்பரிசளிப்பு விழா இடம்பெற்று அவருக்குரிய பரிசு காசோலையை சமூக சேவை பகுதி உத்தியோகத்தர் ஸ்ரீவரத பாஸ்கரன் அவர்கள் அவருடைய வீட்டில் கொண்டு சென்று வழங்கியிருந்தார்கள்.
தேவன்குறிச்சி இலக்கணத்தை உடுப்பிட்டியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னம்மா 1917.03.பிறந்தவர் 30.05.2020. சனிக்கிழமை இறைவனடி சென்றுவிட்டார்.
வடமராட்சிப் பகுதியில் ஆகக்கூடுதலான வயதில் இதுவரையும் இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பஸ்த்தாரிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …