Breaking News

யாழில் பணிபுரியும் இராணுவச் சிப்பாயின் விபரீத ஆசை!! 15 வயது சிறுமியுடன் தனி அறையில் மாட்டினார்

15 வயதுச் சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று தனிமையில் வைத்திருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் திருகோணமலை வான் எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வான் எல பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார் என சிறுமியின் பாட்டனார் பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) முறைப்பாடு செய்தார்.

இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், உடனடியாக அனுராதபுரம்- மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையாக சிறுமியை வைத்திருந்த இராணுவச் சிப்பாயை நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் இராணுவ முகாமில் கடமையாற்றிவரும் மிகிந்தலை- மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த என். சஞ்சீவ நிமல சேன எனும் 23 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை இன்று கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் வான் எல பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *