Breaking News

சர்க்கரை நோய் உள்ளதா? பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க! உடலில் வியக்க வைக்கும் அதிசயம் நடக்கும் !

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோயாளிகள் தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
மேலும் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும். அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம் முன்னோர்கள் சொன்னது போல் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்களைப் பற்றி பார்ப்போம்.

கிவி:
கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த பழம். ஏனென்றால் இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

கொய்யா:
கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இவை மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கி அதுமட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளன.

நாவல் பழம்:
கிராமப் பகுதிகளில் அதிகம் கிடைக்கும். இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரைவில் கட்டுப்படுத்தி . அதுமட்டுமல்லாமல் இதன் கொட்டையை சாப்பிடுவதால் நம் உடலுக்கு நல்ல பலனை தருகிறது.

பீச்:
மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

அன்னாச்சி:
அன்னாசிப் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் உள்ளன.

பேரிக்காய்:
சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள்.பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.

Grapefruits with leaves on a wooden table.
கிரேப் ஃபுரூட்:
ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

முலாம்பழம்:
முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …