Breaking News

வெறும் 225 ரூபாய் பணத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த காரியம்!! நெட்டிசன்கள் ஷாக்..!

நம்முடைய தமிழ்த் திரையுலகில் குறிப்பிட்ட ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தான் அவர்களது நடிப்பை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் நம் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் தனிப்பட்ட ரசிகர்கள்பட்டாளம் உண்டு. காரணம் முதல் படம் காக்கா முட்டை திரைப்படத்தில் இரு சிறுவர்களின் அம்மாவாக வடசென்னை பெண்ணாக வாழ்ந்திருப்பார் ஐஸ்வர்யா. அந்த பாத்திரம் அவருக்கு விருதுகளையும் பல்வேறு வகையில் வாங்கிக் குவித்தது.

வயதில் தன் வயதை ஒத்த இளவயது ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டே பிறகு சிகரம்சாமி 2ம் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். தர்மதுரை கனா படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு மிகவும் வெகுவாகப் பேசப்பட்டது. இப்போது தெலுங்கு உலகிலும் அம்மணி ஏக பிசி.
குறிப்பாக சொல்ல போனால் மூன்று தலைமுறையாகவே ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம் நடித்து வருகிறது. அவரது சகோதரரும் சீரியல் நடிகராக உள்ளார்.இத்தனை சிறந்த வரலாற்றுக்கு பின்பும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை.

தன் ஆரம்பகாலம் குறித்து இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா. அதில் அவர் என்னோட 12 வயதில் என் மூத்த அண்ணன் ராகவேந்திரா அவர்கள் இறந்துட்டார்.அவர் இறப்புக்கான காரணம் அப்போது அவர் ஒரு பெண்ணை காதலித்தார். காதல் தோல்வியால் நடந்த த ற்கொ லையா என்பது கூட எங்களுக்குத் தெரியாது.
எனது இரண்டாவது அண்ணன் அவர்கள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறை படித்துவிட்டு, அப்போதுதான் வேலைக்குப் போயிருந்தார். அவரும் எதிர்பாராத ஒருநாள் சாலை விபத்தில் அவர் இ றந்துவிட்டதாக தகவல் வந்தது. உடனே அனைவரும் உடைந்து போய்விட்டோம்.

இரு அண்ணன்கள் இறந்ததால் எங்கள் குடும்பம் நிலைகுலைஞ்சு போச்சு. நான் 11ம் கிளாஸ் படிக்கும் போது பெசண்ட் நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குப் போனேன் சாஸ் . அங்க ரோட்டில் நின்னு போற,வர்றவங்களுக்கு சாஸ் விக்கணும். சார் இதை சாப்பிட்டு பாருங்க. மேடம் இதை டேஸ்ட் பண்ணிப்பாருங்கன்னு ரோட்டில் இருந்து கத்துவேன். அன்னிக்கு எனக்கு ஒருநாளைக்கு 225 ரூபாய் சம்பளம்.
அதுக்குப்பின்னாடி பெர்த்டே பார்ட்டிகளில் ஈவண்ட்ஸ் கோஸ்ட் பண்ணுனேன். அதுக்கு 500, 1000ன்னு சம்பளம் வரும். அதன் பின்னர் கலக்கப்போவது யாரு? மானாட மயிலாட நிகழ்சியிலும் கூட கலந்திருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதையெல்லாம் கேட்ட அவரது ரசிகர்கள் அடடே நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னால் இவ்வளவு பெரிய சங்கடங்கள் இருக்கிறதா என அதிர்ச்சியில் உள்ளனர்.
இது போன்ற பதிவுகளை தொடர்ந்தும் படிக்கணும் என்றால் புதுமை FM எனும் எமது இணையத்தளத்தில் இணைந்துகொள்ளுங்கள்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …