Breaking News

90 கிலோவில் இருந்து 35 கிலோ குறைத்தது எப்படி? இளம்பெண் சொல்லும் சீக்ரெட் !!

தற்போதுள்ள கால கட்டத்தில் உடல் எடை அதிகரிப்பது என்பது சாதாரணமாகி விட்டது. ஆனால் அதை குறைக்கப்படும் பாடு நினைத்துக்கூட பார்க்க முடிவதில்லை.

அதற்கு முதல் காரணம் உடல் உழைப்பு குறைந்ததே காரணமாகும். தற்போது பெண்களுக்கு அனைத்து வேலைகளுக்கும் பல்வேறு வகையான மெஷின்கள் வந்து விட்டன.
அதுமட்டுமல்லாமல் ஆண்களும் சரி, பெண்களும் சரி கணினி முன் அமர்ந்து வேலை செய்வது அதிகமாகி விட்டது.

உடல் எடை அதிகரிப்பதால் பல்வேறு உடல் நலப்பிரச்சனைக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். இதற்குக் காரணம் ஒழுக்கமற்ற உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமை ஆகியவையே இதற்கு பெரிய காரணமாகும். 90 கிலோவில் இருந்து 35 கிலோ குறைத்தது எப்படி ?? இளம்பெண் சொல்லும் சீக்ரெட் !!
உடல் எடையால் அவதிப்படுபவர்கள், அன்றாட உணவு பழக்கங்களில் முறையாக கவனம் செலுத்தி சரியான முறையில் சாப்பிட்டு வந்தாலே போதும் அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ரசிகா என்ற 24 வயது பெண் 90 கிலோ எடையால் மிகவும் அவதிப்பட்டுள்ளார், அவர் ஒன்றரை வருடத்தில் 35 கிலோ குறைத்துள்ளார். அது எப்படி என்பது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதிகமான உடல் எடையால் எனக்கு பிடித்தமான ஆடைகளை வாங்கி அணிய முடியவில்லை. அதுமட்டும் இல்லாமல் எங்கு புறப்படுவதாக இருந்தாலும் உடல் எடை எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.

இதனால், சிறந்த உடற்பயிற்சி மையத்தை தேர்வு செய்தேன், அதுமட்டுமின்றி உணவு பழங்களிலும் சில மாற்றங்களை கொண்டுவந்தேன்.
காலை உணவு
ஓட்ஸ் மற்றும் வீட்டில் தயார் செய்யப்பட்ட எண்ணெய் சேர்க்காத உணவுகள்.

மதிய உணவு
பழுப்பு அரிசி, கோழி மற்றும் சில நேரங்களில், பன்னீர் மற்றும் மோர். அதனுடன், முளைகட்டிய தானியங்களை சேர்த்து சாப்பிடுவேன்.
இரவு உணவு
தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு உணவினை சாப்பிட்டு விடுவேன். இரவு உணவாக வேகவைத்த முட்டை, பருப்பு மற்றும் பழங்களை சாப்பிடுவேன்.

உடற்பயிற்சி
தினமும் எடை பயிற்சி மற்றும் கார்டியோ ஆகிய இரண்டையும் தவறாமல் செய்து விடுவேன். ஒடுதல் மற்றும் நீச்சல் அடிப்பதையும் மேற்கொண்டேன்.
இடையிடையே சில நேரங்களில் காய்கறி சூப், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோசு, மணி மிளகு மற்றும் சோளத்தை சேர்க்கவும். நீங்கள் விருப்பப் பட்டால் கோழியை வேகவைத்து சாப்பிடலாம்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …