Breaking News

இறுதி ஊர்வலத்துக்கு தயாராகும் மலையக நகரங்கள்!!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், டிக்கோயா ,மஸ்கெலியா, கொட்டகலை,நானுஓயா,நுவரெலியா நகரங்கள் வெறிசோடி காணப்பகின்றன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவையொட்டி அனைத்து நகரங்களிலும் வெள்ளைக்கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் அன்னாரின் கொத்மலை வெவன்டனிலுள்ள பூர்வீக இல்லத்திலிருந்து நுவரெலியா நானுஓயா தலவாக்கலை வழியாக கொட்டகலை சீ.எல்.எப் அலுவலகத்துக்கு இன்று கொண்டுவரப்பட்டவுள்ளது.

பொதுமக்கள் ஆங்காங்கே வீதியின் இருமருங்கிலும் நின்று அஞ்சலி செலுத்த தயாராகி வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …