Breaking News

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு.சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம்
(BAR சோமு – SOMAS TRANSPORT SERVICE)

திரு.ஆறுமுகம் தேவராசா
(ஓய்வுநிலை DIT,தொலைத் தொடர்புத் திணைக்களம்,கொழும்பு)

திருமதி சுகந்தி தேவராசா

திரு.தேவராசா தர்சனன்

திரு.சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம், அவரது அன்பு மகள் சுகந்தி, அன்பு மருமகன் தேவராசா, பாசமிகு பேரன் தர்சனன் ஆகிய நால்வரும் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அகால மரணமடைந்துள்ளனர்.

அகால மரணமடைந்த சோமசுந்தரம் ஆயிலி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் பலாலி வீதி, திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்து E.S.பெர்னாண்டோ வீதி, வெள்ளவத்தை, கொழும்பில் வசித்து வந்தவரும் காலஞ்சென்ற இராசமணியின் ஆருயிர்க் கணவரும் கமலநாதன், நந்தினி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், அகால மரணமடைந்த சுகந்தி, மற்றும் பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும் சுபத்திரா, குலேந்திரன், அகால மரணமடைந்த தேவராசா, மற்றும் Dr.அருட்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அகால மரணமடைந்த தேவராசா மாப்பாணவூரி, காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும் அகால மரணமடைந்த சுகந்தியின் ஆருயிர்க் கணவரும் அகால மரணமடைந்த தர்சனன், மற்றும் ஹரிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் லக்சனாவின் அன்பு மாமனாரும் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, இராஜேஸ்வரி,யோகேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அகால மரணமடைந்த சுகந்தி அகால மரணமடைந்த சோமசுந்தரம் காலஞ்சென்ற இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும் அகால மரணமடைந்த தேவராசாவின் ஆருயிர் மனைவியும் அகால மரணமடைந்த தர்சனன், மற்றும் ஹரிஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும் லக்சனாவின் அன்பு மாமியும் கமலநாதன், நந்தினி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், மற்றும் பவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அகால மரணமடைந்த தர்சனன் அகால மரணமடைந்தவர்களான தேவராசா-சுகந்தி தம்பதிகளின் அன்புப் புதல்வனும் கணேசன் – ஜெயலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும் லக்சனாவின் ஆருயிர்க் கணவரும், ஹரிஸின் அன்புச் சகோதரனும் ஆவார்.

நால்வரினதும் பூதவுடல்கள் 87, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வியாழக்கிழமை ஈமைக்கிரியைகள் நடைபெற்ற பின்னர் பூதவுடல்கள் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கமலநாதன் – +447956485714

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *