Breaking News

டிப்பருக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்! தாய் ப லி!! ம கள் ப டுகா யம்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் ப லியாகி யுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இந்த விபத்து இன்று (28) காலை பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பா் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியை சேர்ந்த 64 வயதான சுப்ரமணியம் அன்னலட்சுமி என்ற பெண்ணே உ யிரிழந் துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்தவரின் மகள் ப டுகாய மடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …