Breaking News

யாழ் யுவதியின் விபரீத விளையாட்டு

யாழ் மல்லாகம் கொட்டைக் காடு பகுதியில் இளம் யுவதி ஒருவர் பெற்றோரை பயமுறுத்தும் நோக்கில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றுள்ளார். இருந்தும் தீயானது சடுதியாக பரவி முற்று முழுதாக எரிந்து அவர் ப லி யாகியுள்ளார்.

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியாலேயே அவர் இவ்வாறான முயற்சியை மேற்கொண்டு பரிதாபமாக ப லி யாகியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மல்லாகம் பகுதியில் வசித்து வரும் சேர்ந்த சூரியகுமார் தேனுஜா(வயது 26) என்ற இளம் யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.

எனினும் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக பெற்றோர்கள் கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைக்க முயன்றுள்ளார்.

பலத்த தீக்காயத்திற்கு உள்ளான யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே அவர் உயிரிழந்துள்ளார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …