Breaking News

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா! வைத்தியர் சத்தியமூர்த்தி கூறியுள்ள தகவல்

சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பி, விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மிகக்குறைவான அளவில் வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில், அவர் கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் குழுவினர் நால்வரை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சுவாச நோய் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர். இவர் சவூதிஅரேபியா நாட்டில் இருந்து, 208 பேருடன் அழைத்து வரப்பட்டிருந்துள்ளார்.

22ம் திகதி கொவிட் 19 வைரஸிற்கான பரிசோதனை செய்யப்பட்டு இல்லை என்ற பின்னர் விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் 25ம் திகதி விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவிடப்பட்டிருந்தார். அங்கு இருந்த போது, மீண்டும் சுவாச பிரச்சினை காணப்படுவதாக, மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

https://www.facebook.com/muthalvan24/videos/207801460651580

நேற்றுமுன் தினம் மாலை செய்யப்பட்ட பரிசோதனையின் போது, அவருக்கு மிகக்குறைவான அளவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், விடுதியில் கடமையாற்றிய நான்கு வைத்திய குழுவினர்களையும், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம்.

எதிர்வரும் 31ம் திகதி இந்த வைத்தியர்களுக்கு தகுந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, மக்கள் வைரஸ் தொற்று தொடர்பாக எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார். அன்றைய தினம் மாலையே 7ம் விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் அறைக்கு மாற்றப்பட்டாா்.

அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டார். மீண்டும் 25ம் திகதி சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கமைய நேற்று மாலை நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருகின்றது. எனினும் அவருக்கு தொற்று குறைந்தளவிலேயே உள்ளது.

இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் குழு கூடி ஆழமாக இந்த விடயத்தை ஆராய்ந்துள்ளதுடன், குறித்த நபர் வைத்தியசாலையில் தங்கியிருந்த காலப்பகுதியில் வேறு யாருடனும் நேரடியாக தொடர்புகளை பேணினாரா? என்பதை ஆராய்ந்துள்ளோம்.

இதற்கமைய குறித்த நபர் தங்கியிருந்த விடுதியிலும், தனிமைப்படுத்தல் விடுதியிலும் பணியாற்றிய நான்கு உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான குறைந்தளவு சந்தர்ப்பம் உள்ளதென்ற அடிப்படையில் அவர்கள் அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

https://www.facebook.com/muthalvan24/videos/335884074240277

அவர்களுக்கான பாிசோதனைகள் எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் பாதுகாப்பு அங்கிகள், முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டே குறித்த நபர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வந்தவர் என்ற அடிப்படையில் கையுறை, முகக்கவசம் அணிந்துள்ளதுடன், சமூக இடைவெளியினையும் பேணியிருக்கின்றனர்.

ஆகவே யாழ்.போதனா வைத்திசாலையில் உள்ள மற்றவர்களுக்கோ, ஊழியா்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இந்த நோய் பரவும் வேறும் தீவிரமானது என்பதால் நாம் மிக அவதானமாக உள்ளோம் என்றார்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *