Breaking News

41 இளைஞர்களும் விடுவிப்பு!! நடந்தது என்ன??

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

“இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இராணுவ அலுவலகரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரப்பட்டது. அவ்வாறான ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் 41 பேரும் விடுவிக்கப்பட்டனர்” என்றும் பொலிஸார் கூறினர்.

நடந்தது என்ன??

மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

யாழ் மாவட்டத்தின் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அணியை சேர்ந்தவர்களிற்கு சொந்தமான ஹொட்டல் இதுவாகும்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *