Breaking News

வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்த மரம்!! இருவர் பரிதாபச் சாவு; முல்லையில் சம்பவம்

முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகளில் இன்று மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக இரண்டு உந்துருளிகளில்  வீதியால் பயணித்த நால்வர் மீது சிலாவத்தை பகுதியில் மரம் ஒன்றின் கிழை ஒன்று முறிந்த வீழ்ந்துள்ளது.

இதன்போது 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கொக்குத்தொடுவாய் மேற்கினை சேர்ந்த இ.ஜெம்சி விகேந்திரன் என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளதுடன், நீராவிப்பிட்டியினை சேர்ந்த 21 அகவையுடைய எட்வேட் எமில்டன் என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் குறித்த சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளதோடு, மேலும் இருவர் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *