Breaking News

மின்சார சபை ஊழியர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! மூவர் பலி!! மூவர் படுகாயம்

எல்ல, வெல்லவாய வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சாரசபையின் பதுளை அலுவலகத்தை சேர்ந்த குழுவொன்று காலியில் நடந்த இறுதி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விட்டு, பதுளை திரும்பிய வழியில் விபத்து இடம்பெற்றது.

இன்று (22) காலை இராவண எல்லை பகுதியில் அவர்கள் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் ஆறு பேர் பயணித்த நிலையில் உயிரிழந்த, காயமடைந்த நிலையில் 5 பேர் மீட்கப்பட்டனர்.

ஒருவர் 100 அடி பள்ளத்தில் சிக்கியிருந்தார். அவரை மீட்க இராணுவம், பொலிசார், பிரதேச மக்கள் பல மணித்தியாலங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். பின்னர் அவர் மீட்கப்பட்டார்.

வாகன சாரதியும், இரண்டு மின்சாரசபை ஊழியர்களுமே உயிரிழந்தனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *