Breaking News

சலூன்காரராக மாறிய ஆசிரியர்! குவியும் பாராட்டுக்கள்!

மட்டக்களப்பிலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவனின் காரணத்தை அறிந்து சலூன்காரராக மாறிய ஆசிரியர் ஒருவரின் செயற்பாடு பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிராமத்திலுள்ள பாடசாலை ஆசிரியரான ஜீவனேஸ்வரன் ஜீவன் தமது வகுப்பு மாணவன் ஒரு வாரமாக பாடசாலை வரவில்லை என வீடு சென்று தேடிச்சென்று கேட்ட போது முடி வெட்டவில்லை அதனால் பாடசாலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளான்.

முடி வெட்டுவதானால் 20Km தொலைவில் இருக்கும் மட்டக்களப்பு கதிரவெளி கிராமத்திலுள்ள சலூன் கடைக்கு போகவேண்டும் அதற்கு வசதியும் இல்லை என்றனர் மாணவனின் உறவுகள்.

இதனை கேட்ட ஆசிரியர் பாடசாலை வருவதற்கு முடி ஒரு தடையா இருக்க கூடாது என ஆசிரியர் தமது கடமைக்கு அப்பால் முடிவெட்டுபவராக மாறி முடிவெட்டிய சம்பவம் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

ஆசிரியர் ஜீவனேஸ்வரன் ஜீவன் மனிதநேயப்பணிக்கு புதுமைFm செய்தி குழுமம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *