Breaking News

போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட யாழ் கிராம அலுவலர் திடீர் உயிரிழப்பு

தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட துர்க்காபுரம் கிராம அலுவலராக கடமையாற்றி வந்த சிறில் ரவிநேசன் (வயது-36) திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ். தையிட்டியைச் சேர்ந்த குறித்த கிராம அலுவலர் அளவெட்டியில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளதுடன் கடந்த சில மாதங்களாக தெல்லிப்பழை துர்க்காபுரம் கிராம அலுவலராகவும் (ஜே-229 ) கடமையாற்றி வந்துள்ளார்.

யுத்த காலத்தில் வன்னியில் இடம்பெயர்ந்திருந்த போது இவரது தந்தையாரும், தம்பியாரும் ஷெல் வீச்சுத் தாக்குதலில் பரிதாபகரமாக உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் குறித்த கிராம அலுவலரும், அவரது சகோதரியும் காயமடைந்து பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர். காலில் காயமடைந்திருந்த குறித்த கிராம அலுவலரின் உடலின் பல பகுதிகளிலும் ஷெல் துகள்கள் காணப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் தனது உடல்நிலையைக் கூடக் கருத்திற் கொள்ளாது கிராம அலுவலர் சேவையிலும், சமூக சேவையிலும் குறித்த கிராம அலுவலர் அதிக அக்கறை செலுத்தி வந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

கடந்த-21 ஆம் திகதி தனது கடமையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய குறித்த கிராம அலுவலர் அன்றைய தினம் மாலை திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

மூளைக் காய்ச்சலால் ஏற்பட்ட கிருமித் தோற்றே இவரது மரணத்துக்க்கான காரணமெனத் தெரிய வருகிறது.

About kalaiselvi

Check Also

அமலுக்கு வரும் கடுமையான சட்டங்கள் – மீறினால் 6 மாத சிறைத்தண்டனை!!

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *