Breaking News

யாழில் கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா தொற்று சந்தேகம்?? பிறந்தது குழந்தை

கோரோனா தொற்றுக்குள்ளானவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.

இச்சம்பவம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை நிகழ்ந்துள்ளது. கிண்ணியா பகுதியில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு குழந்தை ஒன்றை சுக பிரசவம் மூலம் பெற்றுள்ளார்.

இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் சில காணப்பட்டதாகவும் இதனால் அவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.

பின்னர் கொரோனா தொற்றிற்கான பரிசோதனைகள் செய்யப்பட்ட போது அதன் முடிவு தொற்று இல்லை என வந்துள்ளது. இருந்தும் அவர் தொடர்ந்தும் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரிற்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பேற்றை செய்ய வேண்டி ஏற்பட்டால் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து அவரை வெளியே எடுத்து அவசர சத்திரசிகிச்சைகள் செய்யும் சத்திரசிகிச்சை கூடத்தில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள எழுந்தமானமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில வைத்திய நிபுணர்களின் தலையீட்டால் அத் தீர்மானம் தடுக்கப்படுள்ளது. 24 மணிநேரமும் ஓய்வின்றி இயங்கிகொண்டிருக்கும் அவசர சத்திரசிகிச்சை விடுதியை முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி முடக்க முற்பட்டதாக பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பின்னர் தனிமைப்படுத்தல் விடுதியிலேயே வைத்து குறித்த கர்ப்பிணி பெண்ணிற்கு உபகரணங்கள் உதவியுடன் சுகப்பிரசவம் நடந்துள்ளது.

அண்மையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து விடுதிக்கு அனுப்பப்பட்ட நோயாளி ஒருவரினால் இன்று நோயாளிகள் உட்பட 74 பேர் சுய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கும் ஒருவரிற்கு சத்திரசிகிச்சைகள் தேவைப்படின் அதனை தனிமைப்படுத்தல் விடுதிக்குள்ளேயே  தற்காலிக சத்திர சிகிச்சை கூடத்தை அமைத்து சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முற்படாமல் சாதாரண நோயாளிகளிற்கு சத்திரசிகிச்சைக்காக பயன்படும் சத்திரசிகிச்சை கூடங்களை பயன்படுத்தி அவற்றை முடக்க நினைப்பது பாரிய சந்தேகங்களை உண்டு பண்ணுவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *