Breaking News

யாழில் டிப்பர் வாகனம் கோயில் கட்டிடத்தில் மோதி கோர விபத்து

மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தின் ரயர் வெடித்ததால், ஆலய கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்.நாவற்குழி தச்சன்தோப்பு சந்திக்கருகில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்த நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாயுமே படுகாயமடைந்துள்ளனர்.

டிப்பர் மோதியதன் காரணமாக தெருவடிப் பிள்ளையார் ஆலய கட்டடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

காயமடைந்தவர்கள் அவரச அன்புலன்ஸ் ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *