Breaking News

இன்றைய ராசிபலன்கள் 12-07-2020

ஸ்ரீ சார்வரி ஆண்டு – ஆனி 28 – ஞாயிற்றுக்கிழமை (12.07.2020)
நட்சத்திரம் : உத்திரட்டாதி காலை 9.34 வரை பின்னர் ரேவதி
திதி : திருதியை பகல் 12.04 வரை பின்னர் சதுர்த்தி
யோகம் : அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 3.15 – 4.15

ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை)
சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

இன்றைய ராசிபலன்கள் 12-07-2020

Rasi

மேஷம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Rasi

ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

Rasi

மிதுனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

Rasi

கடகம்: உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர்முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிய பாதை தெரியும் நாள்.

Rasi

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.
லேசாக தலை வலிக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

Rasi

கன்னி: குடும்பத்தாருடன் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

Rasi

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சில வேலைகளை விட்டுகொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அமோகமான நாள்.

Rasi

விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

Rasi

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழையகடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள் .

Rasi

மகரம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீகசொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.

Rasi

கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

Rasi

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும் . சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

About kalaiselvi

Check Also

இன்றைய ராசிபலன்கள் 07-08-2020

ஸ்ரீ சார்வரி ஆண்டு – ஆடி 23 – வெள்ளிக்கிழமை (07.08.2020) நட்சத்திரம் : பூரட்டாதி பகல் 2.28 வரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *