Breaking News

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டம்: காரணம் என்ன?.

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் இன்றும், நாளையும் மாகாணம் தழுவிய ரீதியில் சுகவீன விடுப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சுகாதார சேவைக்குள் கடைமையாற்றிவரும் சாரதிகளுக்கு சுகாதாரதுறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களிற்கு இடமாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த சுகவீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார சேவைகள் சாரதிகள், எட்டு மாகாணத்திலும் இல்லாத நடைமுறை வடமாகாணத்தில் மட்டும் ஏன்?, வடமாகாண சுகாதார சேவைகளின் சாரதியை இடமாற்றுவதை உடன் நிறுத்து, யுத்த காலத்தில் தேவைப்பட்ட நாம் இப்போது விலக்கப்படுவது ஏன்? போன்றவாறான பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் எப்பகுதியிலும் இல்லாத நடைமுறை வட மாகாணத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த 35 வருடங்களாக சுகாதார சேவைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களுக்கான இடமாற்றங்கள் எமக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

தற்போது 35 வருடங்கள் கழித்து இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் 8 மாகாணங்களில் இல்லாத நடைமுறை வடக்கு மாகாணத்தில் மாத்திரம் கொண்டு வரப்பட்டுள்ளமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது தொடர்பாக அனைத்து தரப்பிலும் எமது கோரிக்கையை முன்வைத்த நிலையில் எமக்கான சரியான தீர்வினை எவரும் வழங்கவில்லை.

எனவே எமது கோரிக்கையை முன்னிறுத்தி வடமாகாணம் தழுவிய ரீதியில் இன்றையதினம் காலை முதல் சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், தற்போது ஏற்பட்டுள்ள கொ விட் – 19 பரவல் காரணமாக மக்களினதும், நோயாளிகளினதும் நலன்கருதி நோயாளர் காவு வண்டி வாகன சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் குறித்த சுகவீன விடுப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

அமலுக்கு வரும் கடுமையான சட்டங்கள் – மீறினால் 6 மாத சிறைத்தண்டனை!!

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *