Breaking News

யாழில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு நோய் காரணமாக பாடசாலை மாணவி பரிதாபகரமாகப் பலி!!!

டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான மாணவி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த சுதாகரன் பெண்சிட் றஜாந்தி (வயது -9) என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்தார்.
கடந்த 16ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிறுமி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு நோய்த் தொற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு 3 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் மாணவி சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்ததாக தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை மல்லாகம் பிரதேசத்திற்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மோகன் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை, வலி. தெற்கு பிரதேசத்தில் டெங்கு நோய் தொற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கும் வலி.தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தவராசா துவாரகன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இரவு பகல் பராது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதும் தொழிலாளிகளின் ஒத்துழைப்பு போதாமல் உள்ளது எனக் குறிப்பிட்டார்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …