Breaking News

சிறுமி மற்றும் தாயை மோதிய டிப்பர்!! சிறுமி பலி!! சாரதி ஓட முற்பட்டதால் பதட்டம் – படங்கள்

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமையால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரவத்பொத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் சைக்கிளில் சென்ற தாய் மற்றும் மகள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் திருநாவற்குளத்தைச் சேர்ந்த 13 வயதுடைய பிரியந்தி என்ற சிறுமியே சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தாய் சிறிய காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அடுத்து அங்கிருந்து டிப்பர் சாரதி தப்பி ஓட முற்பட்ட நிலையில் அவரை விரட்டிய மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

அதேவேளை அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் டிப்பர் வாகனத்தின் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …