Breaking News

மர்ம நோயின் தாக்கமா??! மேலும் ஒரு பல்கலைக்கழக மாணவன் திடீர் மரணம்

சப்ரகமுவ பல்கலைக்கழத்தின் புவி இயற்பியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் திடீர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நிவன்க இஷான் என்ற வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி மாலை இந்த மாணவன் மயங்கி விழுந்துள்ளார். இதன் காரணமாக பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவனின் நிலைமை தீவிரமடைந்தமையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளளார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சப்ரகமுவ பல்கலைக்கழத்தை சேர்ந்த மற்றுமொரு மாணவி டெங்கு நோயினால் உயிரிழந்திருந்தார்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …