Breaking News

போதையில் தள்ளாடிய இளம்பெண்.. கையை பிடித்து கதவை சாத்திய ரூம் பாய்.. நடந்தது என்ன?

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் போதையில் தள்ளாடிய இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி சில்மிஷம் செய்த ரூம் பாயை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி(29). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர், அலுவலக வேலை காரணமாக கடந்த 22-ம் தேதி சென்னை வந்தார்.
ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் தங்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு இந்துமதி மது உட்கொண்டு போதையில் இருந்ததாக தெரிகிறது.
அப்போது ரூம் பாயை அழைத்து வேலை வாங்கியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ரூம் பாய், இந்துமதி போதையில் இருப்பதை அறிந்து கதவு, ஜன்னல்களை மூடி விட்டு கட்டிலில் தள்ளி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார்.
போதையில் இருந்த போதும் இந்துமதி கூச்சலிட்டு அலற ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் தங்கியிருந்த அனைவரும், ரூம் பாயிடமிருந்து இந்துமதியை மீட்டனர். மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக காவல்துறையினர் ரூம் பாயை கைது செய்தனர்.