Breaking News

புதுக்குடியிருப்பில் சாந்தி எம்.பி.யின் ஆதரவாளர் மீது கொலை வெறித்தாக்குதல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தேவிபுரம் பாரதி வீதியில் இரண்டு உந்துருளியில் சென்ற றவுடிக்கும்பல் ஒன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா அவர்களின் ஆதரவாளர் ஒருவர் மீது சரமாரியான தாக்கதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்.
12.05.2020 அன்று மாலை வேளை தேவிபுரம் பாரதிவீதியில் உள்ள வீட்டில் இருந்து முதன்மை வீதிக்கு உந்துருளியில் சென்று கொண்டிருந்த 34 அகவையுடைய பரமு என்பவர் மீது அதி இரண்டு நவீன உந்திருயில் முகத்தினை முற்றாக மறைத்து வந்த நால்வர் இவர் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளார்கள்
இது குறித்து காயமடைந்த பரமு என்பவர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து முகத்தில் பலத்த காயத்திற்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …